Thirukkuralagam
Kural 1263 of 1330

உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் வரல்நசைஇ இன்னும் உளேன்.

Urannasaii Ullam Thunaiyaakach Chendraar Varalnasaii Innum Ulen

On victory intent, His mind sole company he went; And I yet life sustain And long to see his face again

விளக்கம் — மு. வரதராசன்

வெற்றியை விரும்பி ஊக்கமே துணையாகக் கொண்டு வெளிநாட்டுக்குச் சென்ற காதலர், திரும்பி வருதலைக் காண விரும்பியே இன்னும் யான் உயிரோடு இருக்கின்றேன்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

என்னுடன் இன்பம் நுகர்வதை விரும்பாமல், நான் துணையாவதையும் வெறுத்துத் தன் ஊக்கத்தையே துணையாக எண்ணி, வெற்றி பெறுவதையே விரும்பி என்னைப் பிரிந்தவர், அவற்றை இகழ்ந்து என்னிடம் திரும்ப வருவதை நான் விரும்புவதால் இவ்வளவு காலமும் இருக்கிறேன்.

விளக்கம் — கலைஞர்

ஊக்கத்தையே உறுதுணையாகக் கொண்டு வெற்றியை விரும்பிச் சென்றுள்ள காதலன், திரும்பி வருவான் என்பதற்காகவே நான் உயிரோடு இருக்கிறேன்

Meaning (English)

I still live by longing for the arrival of him who has gone out of love for victory and with valour as his guide.

Open the interactive app →