Thirukkuralagam
Kural 1317 of 1330

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீர் என்று.

Vazhuththinaal Thumminen Aaka Azhiththazhudhaal Yaarullith Thummineer Endru

She hailed me when I sneezed one day; But straight with anger seized,She cried; 'Who was the woman, pray, Thinking of whom you sneezed?'

விளக்கம் — மு. வரதராசன்

யான் தும்மினேனாக; அவள் நூறாண்டு என வாழ்த்தினாள்; உடனே அதை விட்டு யார் நினைத்ததால் தும்மினீர்? என்று கேட்டு அழுதாள்?

விளக்கம் — சாலமன் பாப்பையா

நான் தும்ம, அவள் இயல்பாகவே வாழ்த்தினாள்; அப்படி வாழ்த்தியவளே மறுபடியும் நீர் இப்போது எவள் உம்மை நினைத்ததால் தும்மினீர், என்று கேட்டு ஊடி அழுதாள்.

விளக்கம் — கலைஞர்

தும்மினேன்; வழக்கப்படி அவள் என்னை வாழ்த்தினாள் உடனே என்ன சந்தேகமோ ``யார் உம்மை நினைத்ததால் தும்மினீர்'' என்று கேட்டு, முதலில் அளித்த வாழ்த்துக்கு மாறாக அழத் தொடங்கிவிட்டாள்

Meaning (English)

When I sneezed she blessed me, but at once changed (her mind) and wept, asking, “At the thought of whom did you sneeze?”

Open the interactive app →