Kural 387 of 1330
இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால் தான்கண் டனைத்திவ் வுலகு.
Insolaal Eeththalikka Vallaarkkuth Thansolaal Thaankan Tanaiththiv Vulaku
With pleasant speech, who gives and guards with powerful liberal hand,He sees the world obedient all to his command
விளக்கம் — மு. வரதராசன்
இனியச் சொற்களுடன் தக்கவர்க்குப் பொருளை உதவிக் காக்க வல்ல அரசனுக்கு இவ்வுலகம் தன் புகழோடு தான் கருதியபடி அமைவதாகும்.
விளக்கம் — சாலமன் பாப்பையா
இனிய சொல்லுடன் பிறர்க்குக் கொடுக்கவும், அவர்களைக் காக்கவும் ஆற்றல் பெற்ற அரசிற்கு அது எண்ணிய எல்லாவற்றையும் இவ்வுலகம் தரும்.
விளக்கம் — கலைஞர்
வாக்கில் இனிமையும், பிறர்க்கு வழங்கிக் காத்திடும் தன்மையும் கொண்டவர்க்கு இவ்வையகமே வசப்படும்
Meaning (English)
The world will praise and submit itself to the mind of the king who is able to give with afability, and to protect all who come to him.