Kural 395 of 1330
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் கடையரே கல்லா தவர்.
Utaiyaarmun Illaarpol Ekkatrung Katraar Kataiyare Kallaa Thavar
With soul submiss they stand, as paupers front a rich man's face; Yet learned men are first; th'unlearned stand in lowest place
விளக்கம் — மு. வரதராசன்
செல்வர் முன் வறியவர் நிற்பது போல் (கற்றவர்முன்) ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்விக் கற்றவரே உயர்ந்தவர், கல்லாதவர் இழிந்தவர்.
விளக்கம் — சாலமன் பாப்பையா
செல்வர் முன்னே ஏழைகள் நிற்பது போல் ஆசிரியர் முன்னே, விரும்பிப் பணிந்து கற்றவரே உயர்ந்தவர்; அப்படி நின்று கற்க வெட்கப்பட்டுக் கல்லாதவர், இழிந்தவரே.
விளக்கம் — கலைஞர்
அறிவுடையார் முன் அறிவில்லாதவர் போல் தாழ்ந்து நின்று, மேலும் கற்றுக்கொள்பவர்களின் ஆர்வத்தைக் கற்றுக் கொள்ளாதவர்கள் கடைநிலை மாந்தராக கருதப்படுவார்கள்
Meaning (English)
The unlearned are inferior to the learned, before whom they stand begging, as the destitute before the wealthy.