Kural 80 of 1330
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு.
Anpin Vazhiyadhu Uyirnilai Aqdhilaarkku Enpudhol Porththa Utampu
Bodies of loveless men are bony framework clad with skin; Then is the body seat of life, when love resides within
விளக்கம் — மு. வரதராசன்
அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்: அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல்போர்த்த வெற்றுடம்பே ஆகும்
விளக்கம் — சாலமன் பாப்பையா
அன்பை அடிப்படையாகக் கொண்டதே உயிர் நிறைந்த இந்த உடம்பு, அன்பு மட்டும் இல்லை என்றால் இந்த உடம்பு வெறும் எலும்பின்மேல் தோலைப் போர்த்தியது போன்றது ஆகும்
விளக்கம் — கலைஞர்
அன்புநெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்; இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய வெறும் உடலேயாகும்
Meaning (English)
That body alone which is inspired with love contains a living soul: if void of it, (the body) is bone overlaid with skin.