Kural 77 of 1330
என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம்.
Enpi Ladhanai Veyilpolak Kaayume Anpi Ladhanai Aram
As sun's fierce ray dries up the boneless things,So loveless beings virtue's power to nothing brings
விளக்கம் — மு. வரதராசன்
எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல் அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்.
விளக்கம் — சாலமன் பாப்பையா
எலும்பு இல்லாத புழுவை வெயில் காய்ந்து கொள்வது போல அன்பு இல்லாத உயிரை அறக்கடவுள் காய்ந்து கொல்லும்.
விளக்கம் — கலைஞர்
அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காதவரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும் அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவதுபோல இருக்கும்
Meaning (English)
Virtue will burn up the soul which is without love, even as the sun burns up the creature which is without bone, i.e. worms.