Thirukkuralagam
Kural 935 of 1330

கவறும் கழகமும் கையும் தருக்கி இவறியார் இல்லாகி யார்.

Kavarum Kazhakamum Kaiyum Tharukki Ivariyaar Illaaki Yaar

The dice, and gaming-hall, and gamester's art, they eager sought,Thirsting for gain- the men in other days who came to nought

விளக்கம் — மு. வரதராசன்

சூதாடு கருவியும், ஆடும் இடமும், கைத்திறமையும் மதித்துக் கைவிடாதவர், (எல்லாப் பொருள் உடையவராக இருந்தும்) இல்லாதவர் ஆகிவிடுவார்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

சூதாட்டத்தையும் சூதாடும் இடத்தையும் சூதாடும் திறம் படைத்த கையையும் பெருமையாக எண்ணிச் சூதாட்டத்தை இறுகப் பிடித்துக் கொண்டவர் பொருளால் இல்லாதவராகிப் போனது முன்பும் உண்டு.

விளக்கம் — கலைஞர்

சூதாடும் இடம், அதற்கான கருவி, அதற்குரிய முயற்சி ஆகியவற்றைக் கைவிட மனமில்லாதவர்கள் எதுவும் இல்லாதவர்களாகவே ஆகிவிடுவார்கள்

Meaning (English)

Penniless are those who by reason of their attachment would never forsake gambling, the gambling-place and the handling (of dice).

Open the interactive app →