Thirukkuralagam
Kural 1228 of 1330

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன் குழல்போலும் கொல்லும் படை.

Azhalpolum Maalaikkuth Thoodhaaki Aayan Kuzhalpolum Kollum Patai

The shepherd's pipe is like a murderous weapon, to my ear,For it proclaims the hour of ev'ning's fiery anguish near

விளக்கம் — மு. வரதராசன்

ஆயனுடைய புல்லாங்குழல், நெருப்புப்போல் வருத்தும்‌ மாலைப்பொழுதிற்குத் தூதாகி என்னைக் கொல்லும்‌‌ படையாகவும் வருகின்றது.

விளக்கம் — சாலமன் பாப்பையா

முன்பு இனிதாய் ஒலித்த ஆயனின் புல்லாங்குழல் இப்போது நெருப்பாய்ச் சுடும் மாலைப் பொழுதிற்கு் தூதானது மட்டும் அன்றி, என்னைக் கொல்லும் ஆயுதமுமாகிவிட்டது.

விளக்கம் — கலைஞர்

காதலர் பிரிவால் என்னைத் தணலாகச் சுடுகின்ற மாலைப்பொழுதை அறிவிக்கும் தூதாக வருவது போல வரும் ஆயனின் புல்லாங்குழலோசை என்னைக் கொல்லும் படைக்கருவியின் ஓசைபோல் அல்லவா காதில் ஒலிக்கிறது

Meaning (English)

The shepherd’s flute now sounds as a fiery forerunner of night, and is become a weapon that slays (me).

Open the interactive app →